தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பள்ளிகளில் கடந்த ஆண்டு 9ம் வகுப்பு படித்து முடித்து அடுத்தகட்டமாக 10ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண் டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in இணைய தளம் மூலம் இன்று முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். அவற்றை பூர்த்தி செய்து, அத்துடன் தேர்வுக் கட்டணமாக 750 சேர்த்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங் கள் செப்டம்பர் 7ம் தேதி மாலைக்குள் சமர்ப் பிக்க வேண்டும். கூடுதல் விவரம் வேண்டுவோர் மேற் கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment