எம்பிஏ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம் 

கோவையில் எம்பிஏ படிப்புக்கான மாணவர் சேர்க்கை (பொதுப்பிரிவு) கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

2019-2020 கல்வி ஆண்டில், பல்கலைக்கழகங்கள், பொறி யியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில், எம்பிஏ படிப்புக்கான அரசு ஒதுக் கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த பொள்ளாச்சி மாணவி எஸ்.ஸ்வரூபா, கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியையும், 2-ம் இடம் பிடித்த சென்னை மாணவி ஏ.கார்த்திபிரியா, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தையும், 3-வது இடம் பிடித்த சென்னை மாணவர் பி.பிரசன்னாகுமார், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியையும் தேர்வு செய்தனர். இவர்களுக்கு, தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ, மாணவர் சேர்க்கை செயலர் பி.தாமரை சேர்க்கை ஆணைகளை வழங்கினார். அப்போது, கல்லூரி கல்வி இயக்கக கோவை மண்டல இணை இயக்குநர் பி.பொன் முத்துராமலிங்கம், ஒருங்கிணைப் பாளர் பி.கே.பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் பி.தாமரை கூறியது:

கடந்த 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்ற எம்சிஏ கலந்தாய்வுக்கு 1,533 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 1,213 பேர் கலந்துகொண்டதில், 1,196 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர். 320 பேர் பங்கேற்கவில்லை. 17 பேர் விரும்பிய கல்லூரிகள் கிடைக்காமல் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment