அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர் கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங் கள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி தலைமை வகித்தார். அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்டி டங்களை திறந்து வைத்து பேசும் போது, ‘‘புதிய பாடத் திட்டம் என்பதால் நடைபெற்று முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) அதிகம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இது, ஒரு கூடுதல் தகுதித் தேர்வு மட்டுமே. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறை என்ற பேச்சுக்கே இட மில்லை. அப்படி தேவை இருப்பின் தற்காலிக ஆசிரியர்களை அந் தந்த பள்ளிகளே நியமித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. அவ்வாறு நியமிக்கப் படும் ஆசிரியர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவித் தால், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியமாக அரசு நிர்ணயித்த ரூ.19 ஆயிரம் வழங்கப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment