மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தொடக்க, நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு கல்வித்துறை சுற்றறிக்கை

மேல்நிலைப்பள்ளி தலைமையா சிரியர்கள் இனி அருகே உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி வளா கங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல் வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை யில் கற்றல் பணிகளை மேம்படுத் தும் வகையில் மாநிலம் முழு வதும் உள்ள குறுவள மையங் களின் வரையறை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டன. இதற்குமுன் இருந்த நடை முறை மாற்றப்பட்டு புதிய விதிகளின்படி மேல்நிலைப் பள்ளிகளை மையமாகக் கொண்டு 15 தொடக்க, நடுநிலைப்பள்ளி கள் இணைக்கப்பட்டு குறுவள மையம் ஏற்படுத்தப்பட்டு வருகின் றன. இதற்கிடையே ஒரே வளாகத் தில் இயங்கும் அரசுப் பள்ளி களின் முழு நிர்வாகமும் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரி யர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சர்ச்சையானது. தற்போது மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இனி அருகே உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘குறுவள மைய பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித்தரம் மேம்பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை இன்று (செப்.1) முதல் நடைமுறைக்கு வரும்’’ என்று கூறப்பட்டுள் ளது. இதையடுத்து குறுவள மையத்தின் கீழ் வரும் 15 பள்ளிகளுக்கான நிதி ஒதுக் கீடு உட்பட அனைத்து விவகாரங் களும் சம்மந்தபட்ட மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாயி லாகவே நடைபெறும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment