எம்.இ., எம்.டெக். கவுன்சலிங்: இன்று தரவரிசைப் பட்டியல்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாண வர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 27-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்த வர்களுக்கான தரவரிசைப் பட்டி யல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட உள்ளது. முதுநிலை பொறியியல் படிப்பு களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்துகிறது. இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் இப் போது வெளியிட்டுள்ளது. அதன் படி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கான தரவரிசை பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் அகில இந்திய அள வில் நடத்தப்படும் பட்டதாரி நுண் ணறி தேர்வில் கேட் தகுதி பெற் றவர்கள் மற்றும் தமிழக அளவி லான பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் தகுதிபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பான்செட் தேர்வில் தகுதி பெற்ற பிற மாணவர் களுக்கு ஆகஸ்ட் 28 முதல் 30-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து நிரம்பாத அருந்ததியி னர்ஒதுக்கீட்டு இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற் கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி பிற்பகலில் நடத்தப்பட உள் ளது.

No comments:

Post a Comment