சென்னை , ஆக. 21: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மற் றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக் கும் மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்ட பாடங்களை மட்டுமே பள்ளிகள் நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத்தினால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வை எழுத அனுமதி கிடைக்காது என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே அதற்குரிய பாடங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக 9-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பாடங்களும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களையும் நடத்துகின்ற னர் என்ற குற்றச்சாட்டு பொது வாக உள்ளது.
இதன் மூலம் அந்த மாணவர் கள் பத்து மற்றும் பிளஸ் 2 தேர் வுகளில் அதிக மதிப்பெண் எடுப் பார்கள் என்று பள்ளி நிர்வாகங் கள் கருதுகின்றன.
பெற்றோர் தரப்பில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல புகார் கள் இதுபோன்று வருகின்றன. இந்தநிலையில் இது தொடர் பாக சிபிஎஸ்இ நிர்வாகம் பள்ளி களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் விவரம்: 1 சிபிஎஸ்இ அங்கீகாரம் அளித் துள்ள மற்றும் வரையறுத்துள்ள பாடங்களை மட்டுமே 9 மற் றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்க ளுக்கு நடத்தவேண்டும்.
அதை மீறி வேறு பாடங்களை நடத்தவோ, அல்லது அடுத்த
வகுப்புக்கான பாடங்களை நடத் தினாலோ அந்தப் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக 9-ஆம் வகுப்பு (Skill), பிளஸ் 1 வகுப்பு (Academic and Skill) ஆகியவற்றில் சிபி எஸ்இ அங்கீகரித்துள்ள பாடங் களை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
இதை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும்.
அதன்படி அந்தப் பள்ளிக ளைச் சேர்ந்த மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்ப டும்.
அவர்கள் அந்தத் தேர்வுகளை எழுத தகுதியற்றவர்களாகக் கரு தப்படுவார்கள்.
மேலும் சம்பந்தப்பட்ட பள் ளிகள் மீது அங்கீகாரம் ரத்து
போன்ற நடவடிக்கை எடுக்கப்ப டும். சிபிஎஸ்இ அங்கீகாரம் வழங் கியுள்ள பாடங்கள் தொடர்பான பட்டியல் cbseacademic.nic.in/ Curriculum.htm என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள் ளது.
9 மற்றும் பிளஸ் 1 மாணவர் களுக்கு வகுப்புகளைத் தொடங் குவதற்கு முன்னதாக சம்பந்தப் பட்ட பள்ளிகள் அந்தப் பாடங் களின் பட்டியலை மாணவர்க ளுக்குத் தெரிவித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகே பாடங்களை நடத்தத் தொடங்க வேண்டும். 9ஆம் வகுப்பு (Skill), பிளஸ் 1 வகுப் பு (Academic and Skill) ஆகியவற் றில் சிபிஎஸ்இ அங்கீகரித்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர் களுக்கு கற்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment