பிஎஃப் வட்டி வீதம் 8.65 சதவீதமாக உயர்வு மத்திய தொழிலாளர் அமைச்சகம் தகவல்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டி வீதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய தொழிலாளர் அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் நேற்று தெரிவித் துள்ளார். தற்போது 2018-19 -ம் ஆண்டுக் கான பிஎஃப் வட்டி வீதம் 8.55 சதவீதமாக உள்ளது. இது 8.65 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த முடிவு கடந்த பிப்ரவரி மாதம் தொழிலாளர் அமைச்சகத்தால் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் ஒரு அங்க மான நிதி சேவைத் துறை, இந்த வட்டி வீத உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகத்தின் முழுமையான ஒப்புதலுக்குப் பிறகு இந்த வட்டி உயர்வு அறிவிப்பு விரைவில் வெளிடப்படும். இதுகுறித்து மத்திய தொழிலா ளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியபோது, ‘2018-19 -ம் ஆண்டுக்கான பிஎஃப் வட்டி வீதத்தை 8.65 சதவீதமாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு இருந் தது. எனவே விரைவில் நிதி அமைச்ச கம் இந்த வட்டி வீதத்துக்கு ஒப்பு தல் அளிக்கும் என்று நம்புகிறோம். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு இதற்கான அறிவிப்பு வெளியிடப் படும்’ என்று தெரிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பிஎஃப் வட்டி வீதம் உயர்த்தப்படுகிறது. தற்போது நடை முறையில் இருக்கும் வட்டி வீதம் 2017-18-ம் ஆண்டின்போது நிர்ணயிக்கப்பட்டது. 2015-16-ம் ஆண்டில் 8.8 சதவீதம் அளவில் பிஎஃப்க்கான வட்டி நிர்ணயிக்கப் பட்டு இருந்தது. நிதிப்பற்றாக் குறை ஏற்பட்டதால் 2016-17-ம் ஆண்டில் அந்த வட்டி வீதம் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017-18-ம் ஆண்டில் அது 8.55 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அந்த வட்டிவீத அளவே 2018-19-ம் ஆண்டுக்கான தாகவும் தொடர்ந்தது. இந்நிலை யில் 2018-19-ம் ஆண்டுக்கான வட்டி வீதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஒ) கணக்கின்படி, 2018-19 ஆண்டுக்கு 8.65 சதவீத அளவில் வட்டி அளிக்கப்பட்ட பிறகும் ரூ.152 கோடி அளவில் நிதி உபரியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவது 6 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள் பிஎஃப் சேவையின் கீழ் இணைந்துள்ளனர்.

No comments:

Post a Comment