மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 8-ல் நடைபெறுகிறது செப்டம்பர் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணி யில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடெட்) ஆண் டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. சிடெட் மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாள் தேர்ச்சி பெறுபவர்கள் இடை நிலை ஆசிரியராகவும், 2-ம் தாள் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். அதன்படி சிடெட் தேர்வானது டிசம் பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது.

சிபிஎஸ்இயின் http://ctet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப் பத்தை பதிவு செய்யலாம். விண் ணப்பக் கட்டணமாக ஓபிசி பிரி வுக்கு ஒரு தாள் மட்டும் எழுத ரூ.700, இருதாள்களை எழுதுபவர் களுக்கு ரூ.1200 செலுத்த வேண்டும்.

இதேபோல், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.350-ம், 2 தாள் களையும் எழுத ரூ.600-ம் கட்டண மாக செலுத்த வேண்டும். இதற் கிடையே சிடெட் தேர்வு 20 மொழி களில் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 7 ஆண்டு களுக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரிய ராக பணியில் சேர முடியும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட சிடெட் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment