அண்ணா பல்கலை. முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் 75 சதவீத இடங்கள் காலி

முதுநிலை பொறியியல் படிப்புக் கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 75 சதவீத இடங்கள் நிரம் பாமல் இருப்பதாக அண்ணா பல் கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க 6,728 பேர் மட்டுமே விண்ணப் பித்தனர். இவர்களுக்கான தர வரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கலந்தாய்வு ஆகஸ்ட் 27-ல் தொடங்கி நேற்றுடன் முடிந்தது. கலந்தாய்வில் பங்கேற்க 6,290 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 4,109 பேர் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொண்டனர். பங்கேற்ற வர்களில் 3,852 பேர் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளில் இடங் களைத் தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் நடப்பு ஆண்டு 11,984 இடங்கள் (75 சதவீதம்) வரை இன்னும் நிரம்பாமல் உள் ளன. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டும் 700-க்கும் அதிகமான இடங்கள் நிரம்பவில்லை. இதே போல், தனியார் கல்லூரிகளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

No comments:

Post a Comment