ஒரே நாளில் ரூ.640 விலை உயர்வு தங்கம் பவுன் ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 440-க்கு விற்பனை ஆனது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, தேவை, பங்குச் சந்தை ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாக சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 440-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 680-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததால், பெரும்பாலான நகைக் கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. 40 சதவீதம் முதலீடு அதிகரிப்பு இதுதொடர்பாக சென்னை, தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘சர்வ தேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மற்ற துறைகளை விட, தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவிலும் பங்குச் சந்தையில் சரிவு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சில தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்துக்கு உயரவும் வாய்ப்புள்ளது. தங்கம் விலை உயர்வால் வழக்கமான நாட்களைவிட நேற்று 30 சதவீதம் நகை விற்பனை குறைந்துள்ளது’’ என்றார்.இந்தியாவில் பங்குச் சந்தையில் சரிவு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சில தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment