தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு மேல் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 806 பேர் மட்டுமே தேர்ச்சி

ஒட்டுமொத்தமாக 5.42 லட்சம் பேர் ‘டெட்’ தேர்வெழுதியதில் 806 தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடின வினாத்தாள், போதிய அவகாசம் வழங்காததால் தேர்ச்சி குறைந்துவிட்டதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணி புரிய தகுதியுடையவர்கள் ஆவர்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் ‘டெட்’ தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு ஆசிரியர் தகுதிக்கான தேர்வுகள் கடந்த ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெற்றன.

இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 5,42,046 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இப் போது வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 5.42 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 806 தேர்வர்களே (0.14%) தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘டெட்’ தேர்வில் 2 தாள்களும் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தேர்ச்சி அடைய குறைந்தபட்சமாக ஓசி மாணவர்கள் 90 மதிப்பெண்ணும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 82 மதிப்பெண்ணும் எடுக்க வேண் டும். அந்தவகையில் முதல் தாள் தேர்வை 1,62,313 பேர் எழுதியதில் 482 தேர்வர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர். அதில் 72 பேர் 90 மதிப் பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இதேபோல், 2-ம் தாள் தேர்வு எழுதிய 3,79,733 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 24 பேர் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழகத் தில் 2012-ல் நடத்தப்பட்ட முதல் ‘டெட்’ தேர்வில்கூட 2,500 பட்டதாரி கள் வரை தேர்ச்சி பெற்றனர். ஆனால், இப்போது வெறும் 806 பேர் மட்டுமே வெற்றி பெறும் அளவுக்கு தேர்ச்சி குறைய கடின மான வினாத்தாள்தான் காரணம் என குற்றம்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ‘டெட்’ தேர்வெழு திய பட்டதாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ‘டெட்’ தேர்வை நடத்தாமல் தேர்வு வாரியம் இழுத்தடித்தது. இதற் கிடையே அரசு உதவி பள்ளி களில் ‘டெட்’ தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்துடன் அவகாசம் முடிந்துவிட்டது.

இந்த விவகாரத்தை சமாளிப்ப தற்காக ‘டெட்’ அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28-ல் டிஆர்பி வெளியிட் டது. அதிலிருந்து குறைந்தது 6 மாதங்கள் அவகாசம் வழங்கி யிருக்க வேண்டும். ஆனால், 4 மாதத் திலேயே தேர்வு நடத்தப்பட்டது. இதனால் தேர்வுக்கு தயாராக போது மான கால அவகாசம் கிடைக்க வில்லை.

மேலும், ‘டெட்’ வினாத்தாள் எப் போதும் இல்லாத விதத்தில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வைவிட மிக கடினமாக இருந்தது.

தமிழ்ப்பகுதி மட்டுமே எளிதாக இருந்தது. அதில் மட்டுமே நேரடி வினாக்கள் இடம்பெற்றன. இதர கணிதம், சமூக அறிவியல், உளவியல், அறிவியல் போன்ற பகுதிகள் கடினமாக இருந்தன. கணிதத்தில் பெரு வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதால் பலருக் கும் நேரம் போதவில்லை. சில கேள்விகள் பாடப்பகுதிக்கு வெளியே இருந்தும் கேட்கப்பட்டன. இதனால் நன்கு படித்தவர்கள்கூட தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘டெட்’ தேர்வில் சராசரியாக 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறும் சூழலில் இப்போது 806 தேர்வர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணிவாய்ப்பு உறுதியில்லை. தமிழக அரசு நடத் தும் இன்னொரு போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே வேலை கிடைக்கும். அந்த தேர்வுக்குரிய பாடத்திட்டம் உட்பட விவரங்கள் எதுவும் கூறப்படவில்லை.

பணிவாய்ப்பு குறைவாக இருப்ப தால் ‘டெட்’ தேர்வு கண்துடைப்புக் காக நடத்தப்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைத்துவிடும். ஆனால், ‘டெட்’ தேர்வில் வெற்றி அடைந் தும் பலன் இல்லாததால் பட்ட தாரிகளிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே, குறைந்தபட்சம் ‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்து பணிவாய்ப்பு வழங்க அரசு முன்வர வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எதிர்காலத்தில் கல்வி தொடங்கி வேலைவாய்ப்பு வரை அனைத்தும் போட்டித் தேர்வுகள் மூலமாகவே நிர்ணயிக்கப்பட உள்ளன. இன் றைய நவீன தொழில்நுட்ப காலத் துக்கு ஏற்ப மாணவர்களை திறம்பட உருவாக்க வேண்டும். அதை தரமான ஆசிரியர்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.

தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக வினாத் தாள் சற்று கடினமாக வடிமைக் கப்பட்டது. எனினும், அறிவிக்கப் பட்ட பாடத்தில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட்டன. எனவே, பழிபோடுவதை விடுத்து திறமைகளை பட்டதாரிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment