குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு, தமிழகத்தின் 301 தாலுகா மையங்களிலும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கிறது.

தகுதியான விண்ணப்பதாரர் களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) டிஎன் பிஎஸ்சியின் tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் 22-ம் தேதி (நேற்று) முதல் வெளியிடப் பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு, பிறந்த தேதி ஆகிய வற்றை உள்ளீடு செய்து நுழை வுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் நிரா கரிக்கப்பட்டவர்கள் அதற்கான காரணத்தையும் இவ்வாறு தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment