48 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

கரூரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பேசுகிறார் அமைச்சர் பா.பெஞ்சமின். உடன், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் உள்ளிட்டோர்.

கரூர்
இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 12,360 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 2,775 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன என மாநில ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் தெரிவித் தார்.

கரூரில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கான மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

2019-ம் ஆண்டு உலக முதலீட்டா ளர்கள் 2-வது மாநாட்டின் மூலமாக கையெழுத்திடப்பட்டுள்ள 12,360 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நேற்று (ஆக.21) வரை 2,775 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ரூ.4,625 கோடி யில் உற்பத்தியை தொடங்கி உள்ளன. இதன்மூலம் 48,203 வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன.

இந்த மாநாட்டின் மூலமாக கரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதற்கு 838 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந் தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

அனைத்து ஒப்பந்தங்களையும் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் நிறைவேற்றுவதற்குத் தேவையான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்றார்.

மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழகம் அடுத்த 10 ஆண்டு களுக்கு மின் மிகை மாநிலமாக செயல்படும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 6,000 மெகாவாட் மின்சாரம் கொண்டுவரப்படுகிறது. இதில் தமிழகத்துக்கு 4,000 மெகாவாட்டும், கேரள மாநிலத்துக்கு 2,000 மெகாவாட்டும் வழங்கப்படும்.

கரூர் மாவட்டம் புகழூரில் ரூ.480 கோடியில் கதவணை கட்ட அனுமதி வழங்கியுள்ள நிலையில், குளித்தலை பகுதியில் கதவணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 லட்சம் ஒதுக் கப்பட்டுள்ளது. மின்சார பேருந்து கள் இயக்கத்துக்கு வந்த பிறகு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பிஎஸ்-6 ரக வாகனங்கள் இயக்கப் படும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் த.அன்ப ழகன், இந்திய தொழில் கூட்ட மைப்பின் மாநிலத் தலைவர் சந்திரசேகரன், துணைத் தலைவர் ஹரி தியாகராஜன், கரூர் மாவட்டத் தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் சேதுபதி, சிறு குறு தொழில் நிறுவனங்களின் தலைவர் சங்கர், கரூர் வைஸ்யா வங்கியின் தலைவர் நடராஜன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment