உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Friday, August 16, 2019

காஞ்சீபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் 2019 ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி இன்றுடன் நிறைவுபெறுகிறது


காஞ்சீபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

46-வது நாளான நேற்று அத்திவரதர் ஏலக்காய் மாலை, துளசி மாலை, ரோஜாப்பூ மாலை, தாமரை பூமாலை என்று மலர் அலங்காரத்தில் வெண்பட்டு அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தனிவரிசையில் சக்கர நாற்காலியில் வந்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். ஆடி கருடசேவையையொட்டி நேற்று நண்பகல் 12 மணியுடன் அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வரிசையில் காத்திருந்தவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காத்திருக்கும் பக்தர்கள் நள்ளிரவு 2 மணிவரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.

அத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது. வெளியூரில் இருந்த வந்த பக்தர்கள் தங்க இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளானார்கள். கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இன்று அத்திவரதரை முக்கிய நபர்களுக்கான வரிசையில் நின்றோ, டோனர் பாஸ் மூலமாகவோ தரிசிக்க முடியாது. பொது தரிசன வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதையடுத்து நாளை (சனிக்கிழமை) சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு காஞ்சீபுரம் வந்த நடிகை நயன்தாரா அத்திவரதரை தரிசித்தார். அவருக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் மாலைகள் அணிவித்து முந்திரி, திராட்சை, கற்கண்டு போன்றவற்றை கொடுத்தனர்.

#அத்திவரதர்வைபவம் 2019

மனம் கனக்கிறது வரதா..
மறுபடி...  நீ  நீருக்குள்ளா..?
மூச்சுத் திணறுமோ உனக்கு..?! நினைவே....
மூச்சடைக்கிறதே எனக்கு..

உனக்கிது சம்மதம் தானா.. ?
பெருமானே...
நீயும்
வருந்துகின்றனையோ...?

பக்தரைப் பிரியும்
துயரம் உனக்கெனில்..
உனைப்பிரிதலும்
எமக்குச் சாத்தியமோ..?

உன் புன்னகை முகம்
மறக்க ஏலையே.....!
உன் பூவலங்காரம் ..
நெஞ்சு நிறைந்ததே..

தினமொரு பட்டு...
நெய்தவர் யாரோ.. உன்
திருமேனி தழுவுமென
நினைத்திருப்பாரோ...

எத்தனை கரிசனம்..
எத்தனை தரிசனம்..!
காஞ்சீ மா நகரம்
கண்டிலா வைபவம்..!

நீராழி  மண்டப
மீன்கள் துள்ளுதாம்..
நினையடையும் நாட்கள்
மீண்டும் வந்ததே. !

நாற்பது ஆண்டில்
மீண்டு நீ வருவாய்...
கவிதை புனைந்திட
நானிருப்பேனா..?

ஆதலின் வரதா...
அத்தி வரதா..
ஒன்று சொன்னேன்..
இன்றே சொன்னேன்..

பூமியில் தீமைகள்
ஒழிப்பாய் இறைவா !
நன்மைகள் நிறைத்து
நாட்டினைக் காப்பாய்..

மானிடர்க்கெல்லாம்
நற்கதி யருள்வாய்
ஆன்மிகம் தழைத்திட
ஆவன செய்வாய்

எம்குலம் வாழ
எமக்கருள் செய்வாய்..
என்றும் உந்தன்
திருவடி யருள்வாய்..

அத்தி வரதா..
காஞ்சி முனிவா..
நின் திருவடி சரணம்..
சரணம் தேவே..

#காஞ்சிஅத்திவரதர் 2019

No comments:

Post a Comment