முதுநிலை பொறியியல் படிப்பு 4 நாட்கள் நடைபெறுகிறது

முதுநிலை பொறியியல் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்குகிறது.

எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாண வர் சேர்க்கைக்கான கலந் தாய்வை இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதில் பங்கேற்க தமிழக அரசின் டான்செட் நுழைவுத் தேர்வு அல்லது கேட் என்ற தேசிய பட்டதாரி நுண்ணறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் படி மொத்தமுள்ள 16,728 இடங் களில் சேர 6,728 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.

இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 27 முதல் 30-ம் தேதி வரை கலந்தாய்வு நடை பெற உள்ளது. முதல்நாளில் கேட் தகுதி பெற்றவர்கள் மற்றும் டான்செட் தகுதிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலந் தாய்வு நடைபெறும்.

அதன்பின் டான்செட் தேர்வில் தகுதி பெற்ற பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதல் 30-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும். தொடர்ந்து நிரம்பாத அருந்ததி யினர் ஒதுக்கீடு இடங்களில் எஸ்சி பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ம் தேதி மதியம் நடத் தப்பட உள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://tanca.annauniv.edu/tanca19/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அண்ணா பல் கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment