ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கு ஆக.31-ம் தேதி கடைசி நாள்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கைத் தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசல், தவறுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு களைத் தவிர்ப்பதற்காக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர கணக்கை கடைசி நாளான வரும் 31-ம் தேதிக்கு முன்னதாகவே தாக்கல் செய்யு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரோ, அவர் களது பிரதிநிதிகளோ, சென்னை, அண்ணாநகர் 2-வது அவென்யூ, நியூரி டவர்ஸில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தின் உதவி மையத் துக்கு நேரில் வந்து அலுவலர் களின் உதவியுடன் வரி தாக்கல் செய்யலாம்.

வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உதவி மையத்தை, அனைத்து தகவல்களுடன் நேரில் அணுகலாம்.

ஜிஎஸ்டி வருடாந்திர வரிக் கணக்கை தாக்கல் செய்வது தொடர்பாக ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால், sevakendra-outer-tn@gov.in மற்றும் gstcell.outer@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ அல்லது 26142850 / 26142851 / 26142852 / 26142853 என்ற தொலைபேசி எண்களிலோ உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி ஆணையர் ரவீந் திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment