உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆக. 30-ல் கலந்தாய்வு

உபரி இடைநிலை ஆசிரியர் களுக்கான பணிநிரவல் கலந் தாய்வு ஆகஸ்ட் 30-ல் நடை பெறும் என்று தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள் ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி எமிஸ் இணையதளம் வழியாக பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் செய்து கொள்ள வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், அரசுப்பள்ளி களில் உபரியாக உள்ள பட்ட தாரி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற உள் ளது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment