எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது

2019-2020-ம் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறவுள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணத் தொகையான ரூ.50-ம் சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 7-ந் தேதி ஆகும். காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment