தேசிய தேர்வு முகமையின் தேர்வுகால அட்டவணை வெளியீடு  நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 3-ல் நடைபெறும் டிசம்பர் 2 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கால அட்டவ ணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது.

நம் நாட்டில் உயர்கல்வி நிறு வனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளை யும் நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின் றன. இந்நிலையில் 2020 ஜூன் வரை ஓராண்டுக்கான தேர்வுகால அட்டவணையை என்டிஏ நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீட் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு டிசம்பர் 2-ல் தொடங்கி 31-ம் தேதி முடி வடையும். ஹால்டிக்கெட்கள் மார்ச் 27-ல் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகும்,

ஜேஇஇ முதன்மை தேர்வு

ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப் படும். அதன்படி முதல்கட்டத் தேர்வுகள் ஜனவரி 6 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் செப்டம்பர் 2-ல் தொடங்கி 30-ம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும். ஹால்டிக் கெட்கள் டிசம்பர் 6-ம் தேதியும், தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும். 2-ம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 3-ல் தொடங்கி 9-ம் தேதி முடிவடையும். மாணவர் கள் பிப். 7 முதல் மார்ச் 7-வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவு ஏப்ரல் 30-ல் அறிவிக்கப்படும்.

யுஜிசி நெட் தேர்வு

இதுதவிர உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 2-ல் தொடங்கி 6-ம் தேதி வரையும், இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகைக்கான நெட் தேர்வு டிசம்பர் 15-ம் தேதியும் நடைபெறும். இந்த தேர்வுக்கு இணையதளம் வழியாக செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஹால்டிக்கெட் நவம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ல் வெளியாகும். நீட் தவிர இதர தேர்வுகள் கணினி வழியாக நடத்தப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in இணையத்தில் அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment