உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களில் தற்காலிகமாக 2 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தமிழக அரசு ஆணை

தமிழக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2018-19-ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி-1ல் காலியாக உள்ள உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களில் 1,883 கவுரவ விரிவுரையாளர்களை மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில், முறையான உதவி பேராசிரியர் நியமிக்கப்படும்வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள், இவற்றில் எது முந்தியதோ அதுவரை பணியமர்த்த ஆணையிடப்பட்டது. அதோடு, அந்த ஆண்டில் சுழற்சி-1ல் தற்காலிகமாக 540 கூடுதல் கவுரவ பணியாளர்களை பணியமர்த்த அனுமதித்தும் ஆணையிடப்பட்டது.

இந்த நிலையில் அரசுக்கு கல்லூரிக் கல்வி இயக்குனர் கடிதம் எழுதினார். அதில், 2019-20-ம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே 2,653 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி, உதவிப் பேராசிரியர்களை நியமிக்கும்வரை தற்காலிகமாக அதே எண்ணிக்கையில் கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த ஆணை வழங்கும்படி கோரியுள்ளார்.

அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து ரூ.15 ஆயிரம் வீதம் 2,120 கவுரவ விரிவுரையாளர்களை 11 மாதங்களுக்கு நியமிக்கவும், அதற்காக ரூ.35 கோடியை ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. அந்த வகையில் ஆண்கள் கல்லூரிகளுக்கு 1,416 கவுரவ விரிவுரையாளர், மகளிர் கல்லூரிகளுக்கு 666 கவுரவ விரிவுரையாளர், ஆண்கள் கல்வியியல் கல்லூரிகளுக்கு 25 கவுரவ விரிவுரையாளர், மகளிர் கல்வியியல் கல்லூரிகளுக்கு 13 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment