சென்னையில் 29-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வேலை வாய்ப்புத் துறை சார்பில் ஆகஸ்ட் 29-ம் தேதி தனியார்துறை வேலவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக வேலை வாய்ப்புத் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, ‘மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல் தளம், டான்சி கார்ப்பரேட் வளா கம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032’ என்ற முகவரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த இம்முகாம் நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, செவிலியர், ஓட் டல் மேனேஜ்மென்ட், பி. ஆர்க். ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படித்துள்ள 21 வயது முதல் 40 வயது வரையுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

வேலைநாடுநர்கள் தங்கள் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சுய விவரக்குறிப்புடன் பங்கேற்க வேண்டும். முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியமில்லை. இதற்கு பயணப்படி ஏதும் வழங் கப்படமாட்டாது. மேலும் விவரங் களுக்கு மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044-22500134 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment