உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் ஜன.5-ல் அகில இந்திய நுழைவுத் தேர்வு 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி சைனிக் பள்ளி யில், 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜனவரி 5-ம் தேதி அகில இந்திய நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் நேற்று வெளியிட்டு அறிக்கை:

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தி வரும் அமரா வதி சைனிக் பள்ளியில் 2020-21-ம் கல்வி ஆண்டில் 6 மற்றும் 9- ம் வகுப் புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு 2020 ஜனவரி 5-ம் தேதி நடைபெறும். 9-ம் வகுப்புக்கு ஆங்கில மொழியி லும், 6-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கி லம், இந்தி ஆகிய மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படும்.

6-ம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர், 2020 மார்ச் 31-ம் தேதி யன்று 10 முதல் 12 வயதுக்கு (1.4.2008 முதல் 31.3.2010-க்குள் பிறந்தவராக) உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப் பட்ட பள்ளியில் 5-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

9-ம் வகுப்பில் சேர 2020 மார்ச் 31-ம் தேதியன்று 13 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவராக (1.4.2005 முதல் 31.3.2007-க்குள் பிறந்தவராக) இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் சட்ட விதிகளின்படி, ஆண்டுக்கு ரூ.50,000 வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 6-வகுப் புக்கு 90, 9-ம் வகுப்புக்கு 6 இடங் களும் நுழைவுத் தேர்வு மூலமாக நிரப்பப்படும். ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.

9-ம் வகுப்புக்கு உடுமலை, புதுச்சேரி, சென்னையில் தேர்வு நடைபெறும். 6-ம் வகுப்புக்கு உடுமலை அமராவதி நகர் மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடைபெறும்.

பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.400, பட்டியல் இனத்த வர் ரூ.250 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆக.5- முதல் செப்.23-க் குள் பதிவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment