15,700 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும் நாடு முழுவதும் 75 அரசு மருத்துவ கல்லூரி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவக் கல்லூரி களைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:

பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021-22-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். அவை மாவட்டங்களில் அமைந் துள்ள அரசு மருத்துவமனை களையொட்டி அமைக்கப் படும்.

மத்திய அரசின் நிதியுதவி யுடன் செயல்படுத்தப்படும் 3-வது கட்டத் திட்டத்தின் கீழ் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் நாட்டில் கூடுத லாக 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்.

200 படுக்கைகள் கொண்ட மாவட்ட மருத்துவமனை களுடன் இணைந்து இந்த மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படும். மருத்து வக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களாக தேர்வு செய் யப்பட்டு அவற்றை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பகுதி மக்களுக் கும் தரம்வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை, மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துதல், அனை வருக்கும் மருத்துவக் கல்விக் கிடைக்க ஊக்கமளித்தல் ஆகி யவை இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதன் நோக்கம் ஆகும்.

இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச் சர் பியூஷ் கோயல் கூறிய தாவது:

ஒற்றை பிராண்ட் சில் லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் நேரடி அந் நிய முதலீடு செய்யும் அவற் றுக்கு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மேலும் ஒப் பந்த உற்பத்தி மற்றும் நிலக் கரி சுரங்கத் துறையிலும் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment