முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியில் தமிழகம் முழுவதும் 1,475 இடங்கள் காலி நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,475 முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை, பதவி உயர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் காலி பணியிடங்கள் குறித்த தகவலை வருவாய் நிர்வாக ஆணையரகம் கோரியிருந்தது. அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங் களில் காலியாக உள்ள முது நிலை வருவாய் ஆய்வாளர் பணி யிடங்கள் குறித்த விவரங்களை அனுப்பியிருந்தனர்.

இதன் அடிப்படையில் அப்பணி யிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வரு வாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனுப்பிய முது நிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிடங்கள் குறித்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதில் 91 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,384 பணியிடங்கள், அந்தந்த வருவாய் மாவட்டங்களில் பதவி மூப்பு மூலம் நிரப்பப்பட வேண்டும்.

அந்த வகையில், சென்னை யில் 31, வேலூரில் 25, திருவண் ணாமலையில் 18 உட்பட 91 பணியிடங்கள் நேரடியாகவும், காஞ்சிபுரத்தில் 167, சென்னையில் 109, திருச்சியில் 96 உட்பட 1,384 பணியிடங்கள் பதவி மூப்பு மூலமும் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இந்தப் பதவி உயர்வில் 30 சதவீதம் மட்டுமே இடமளிக்கப்படுவதாகவும், இதை அதிகரிக்க வேண்டும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.91 இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமும், 1,384 பணியிடங்கள் பதவி மூப்பு மூலமும் நிரப்பப்பட வேண்டும்.

No comments:

Post a Comment