உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் கல்வித்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டத்திலும் தேர்வுத் துறை யிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் பத்தாம் வகுப்புக்கும் புதிய பாடத்திட்டம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

எனினும், மாதிரி வினாத்தாள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட தால் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராவதில் குழப்பம் நீடித்தது.

முதல் பருவத் தேர்வுகளும் தொடங்கி நடந்து வருகின் றன. இந்நிலையில் பொதுத்தேர்வுக் கான மாதிரி வினாத்தாள்களை கல்வித்துறை நேற்று தனது இணையதளத்தில் வெளியிட் டுள்ளது.

அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவி யல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மாநில கல்வி யில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப் பட்டுள்ளன.

மேலும், அனைத்து பள்ளிகளுக் கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப் பட்டுள்ளன. இதைப் பின்பற்றி மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், இந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையில்தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வடிவ மைக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment