உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிகள் நிர் வகிக்கும் பள்ளிகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரி யரல்லாத பணியாளர்கள், தகுதி யான ஊழியர்கள் அனைவரும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், பக்ரீத் ஆகிய பண்டிகைகளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக அவர்க ளுக்கு பண்டிகை முன்பணம் வழங்கப்படுகிறது.

இந்த தொகை அடுத்த 10 மாதங் களில் சம்பளத்தில் இருந்து பிடித் தம் செய்யப்படும். கடந்த 2012-ம் ஆண்டு வரை, பண்டிகை முன்பண மாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அதே ஆண்டு நவம்பரில் இந்த தொகை, ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி சட்டப்பேரவையில், நிதித்துறை மானிய கோரிக்கைகள் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ‘‘அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்’’ என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் அடிப்படை யில், பண்டிகை முன்பணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்துவதற்கான அரசாணையை நிதித்துறை செய லர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள் ளார். மேலும் முன்பணம் ஒதுக்கு தல், அதை திரும்பப் பெறுவதற்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைகள் தொடரும் என்றும், அடுத்து வரும் பண்டிகைகளுக்கு இந்த சலுகையை பயன்படுத்தும் வகை யில் உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment