உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

வேலை நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே செல்லக்கூடாது பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

'பள்ளி வேலை நேரங்களில் ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் வெளியே செல்லக் கூடாது' என ஆசிரியர்களுக்கு பள் ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளின் நிர் வாக விவரங்கள் மாணவர் ஆசிரி யர் விவரங்கள் போன்றவை பள்ளி | மேலாண்மை இணையதளமான எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளன. இயக்குநர் அலுவலகங்களில் இருந்து இந்த விவரங்களை கேட்டால் இணையதள விவ ரங்களை மின்னணு முறையில் அனுப்பி விடலாம். இந்த விவரங் களுக்காக ஆசிரியர்களை நேரில் அழைத்து கூட்டம் நடத்த வேண்டி யநிலை ஏற்படாது. . அதேநேரம் நிர்வாக காரணங்க ளுக்காக கூட்டம் நடத்த வேண்டி யிருந்தால் மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம். அதனால் பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது. மேலும் தலை மையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், விவரங்களை கேட்கவும் அளிக் கவும் பள்ளி வேலை நேரங்களில் கல்வி அலுவலகங்களுக்கு செல் வதை தவிர்க்கவேண்டும். தேவைப்படும் விபரங்களை மின் னஞ்சல் மூலமாக அனுப்பினால் பள்ளியின் வேலை நேரம் பாதிக் கப்படாது. ஆசிரியர்களும் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் கண்டிப்புடன் பின்பற்றும்படி ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் அறி வுறுத்த வேண்டும் என அதில் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment