உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, July 9, 2019

பள்ளிக்கல்வித் துறையில் புதிதாக தேர்வுத் துறை ஆலோசகர் பதவி உருவாக்கம் 

பள்ளிக்கல்வியில் அரசு தேர்வுத்துறை இயக்குநராக இருந்த தண்.வசுந்தராதேவி கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால், பொதுத்தேர்வுகள் பணிகள் நடைபெற்ற தால் அவரின் பதவிக்காலம் 3 மாதத் துக்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து பதவி நீட்டிப்பு முடிந்து கடந்த ஜூன் மாதத்துடன் தேர்வுத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து வசுந்தராதேவி ஒய்வு பெற்றார். தொடர்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவன இயக்குநராக பணிபுரிந்த உஷா ராணி, தேர்வுத் துறையின் புதிய இயக்கு நராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தேர்வுத் துறையில் புதிதாக ஆலோசகர் பதவியை உருவாக்கி அந்த இடத்துக்கு வசுந்தராதேவியை பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளி யிட்ட அரசாணையில், “பள்ளிக்கல்வியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கேற்ப தேர்வு முறைகளில் வினாத்தாள் வடிவமைப்பி லும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்காக தேர்வுத் துறையில் புதிதாக ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டு, அதன் ஆலோசகராக ஒய்வுபெற்ற முன்னாள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நியமிக்கப்படுகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகள் ஆலோசகராக நீடிப்பார் இவருக்கு மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். வினாத்தாள், வினா வங்கி தயாரிப்பு, ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட தேர்வுகள் சார்ந்த பணிகளை இவர் கவனிப்பார்” என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment