உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

பள்ளி பாடநூல்களில் திருக்குறள் இடம்பெறும் கம்போடியா கலாச்சாரத் துறை உறுதி

கம்போடியா நாட்டு பள்ளி பாடநூல்களில் திருக்குறள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப் படும் என்று கம்போடியா அரசு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் மார்ன் சொப்ஹீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் மற்றும் கம்போடியா இடையே இருந்த வரலாற்று உறவு குறித்து ஆய்வுசெய்ய 5 நாள் பயணமாக தமிழகம் வந்தோம். வரலாற்று பகுதிகளில் ஆய்வு காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், வை குண்டநாதர் கோயில், மாமல்ல புரம், தஞ்சாவூர் பெரிய கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி களில் ஆய்வு செய்தோம். அதில், கேமர் பேரரசுக்கும் (தற்போது கம்போடியா நாடு), காஞ்சி புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ பேரரசுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தோம். 210 அடி சுயம்பு லிங்கம் 6-ம் நூற்றாண்டில் கேமர் பேரரசை ஆட்சி செய்த மகேந் திர வர்மன்தான், காஞ்சிபுரம் பல்லவ அரசையும் ஆண்டு வந் தார் என்பதை, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் வாயிலாக அறிந்து வியப்படைந்தோம். மேலும் கம்போடியாவில் இன்றும் பல்வேறு தமிழ் சொற் கள் பழக்கத்தில் உள்ளன. பல பெயர்கள் தமிழ் பெயர்களாக உள்ளன. தமிழகத்தில் சிவனை வழிபடு வது போன்று, கம்போடியா வில் சுமார் 210 அடி உயரம் கொண்ட உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு லிங்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக் கப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனுக்கு சிலை இதை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து புதுப்பிக்க இருக் கிறோம். மேலும், திருக் குறளை கேமர் மொழியில் மொழி பெயர்த்து, கம்போடியா நாட்டு பள்ளி பாடநூல்களில் பாடமாக சேர்க்கப்படும். கேமர் பேரரசுக்கு ஆதரவாக இருந்த சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு கம்போடியாவில் சிலை வைக்க இருக்கிறோம். இவ்விழா அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் உலகெங் கிலும் இருந்து 25,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது பன்னாட்டு தமிழர் நடுவம் தலைவர் திருத்தணிகாசலம், அங்கோர் தமிழ்ச் சங்க செயலர் இரா.ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.கேமர் பேரரசுக்கு ஆதரவாக இருந்த சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு கம்போடியாவில் சிலை வைத்து வரும் ஆண்டு, விழா கொண்டாட உள்ளோம். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment