உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, July 8, 2019

தலைமை ஆசிரியராக 543 பேருக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியராகவும், முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டு முதுநிலை ஆசிரியர்களில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் தற்காலிக பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களின் பணிக்காலம் மற்றும் சுயவிவரக் குறிப்புகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 543 முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் பிழைகள் இருந்தால் உடனே சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment