ரூ.50,000க்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனையில் பான் எண்ணுக்குப் பதிலாக ஆதார்

ரூ.50 ஆயிரத்துக் கும் அதிகமான ரொக்கப்பரிவர்த்தனை களுக்கு நிரந்தர வருமான வரி கணக்கு (பான்) எண்ணுக்குப் பதிலாக, ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என்று வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷண்பாண்டே கூறினார். இதுவரை, ரூ.50,000-க்கும் அதிக மான ரொக்கப் பரிவர்த்தனைகளில் பான் எண் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். இதேபோல், ரூ.10 லட்சத் துக்கும் அதிகமான அசையா சொத் துகளை வாங்கும்போதும் பான் எண் தெரிவிப்பது கட்டாயமாகும். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், வரி செலுத்துவோரின் சிரமத் தைக் குறைக்கும் வகையில், பான் எண் ணுக்குப் பதிலாக, ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். இதுகுறித்து வருவாய்த் துறைச் செய் லர் அஜய் பூஷண் பாண்டே சனிக்கி ழமை கூறியதாவது: நாடு முழுவதும் 120 கோடி பேர் ஆதார் அட்டைவைத்துள்ளனர். அவர் களில் 22 கோடி பேர் பான் அட்டை வைத்துள்ளனர். புதிதாக பான் அட்டை வாங்க விண்ணப்பித்தால், முதலில் ஆதார் எண்ணைப் பயன்ப டுத்த வேண்டியுள்ளது. எனவே, ஆதார் இருப்பதால், புதிதாக பான் எண் வாங்க வேண்டியதில்லை. பான் எண் கட்டாயம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும், அதற்குப் பதிலாக, ஆதார் எண்ணைப் பயன்படுத் தலாம் என்றார் அவர். அப்படியெனில் இனி பான் எண் பயன்பாட்டில் இருக்காதா என்று செய் தியாளர்கள் கேட்டதற்கு, 'அப்படி எதுவும் நடக்காது; ஏனெனில் மக்கள் தங்கள் விருப்பம் போல், ஆதார் எண் ணையோ, பான் எண்ணையோ பயன் படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சில ருக்கு ஆதாரை விட பான் எண் பயன்ப நித்துவது வசதியாக இருக்கும். எனவே, ஆதாரும், பான் எண்ணும் பயன்பாட் டில் இருக்கும்' என்று அஜய் பூஷண் பாண்டேகூறினார்.

No comments:

Post a Comment