உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, July 10, 2019

தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான 3,968 எம்பிபிஎஸ் இடங்களில் தமிழக மாணவர்கள் மட்டுமே சேர முடியும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் பழனிவேல் தியாக ராஜன், “தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் இடம்பெற் றுள்ள பல மாணவர்களின் பெயர் கள் வெளிமாநிலங்களின் தர வரிசைப் பட்டியலிலும் இடம்பெற் றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 2017-ம் ஆண்டிலும் இப்பிரச்சினை எழுந்தது. எனவே, கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலை யில் தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர முடியாதபடி அரசு தடுக்க வேண்டும்” என்றார். அவருக்கு பதிலளித்து சுகா தாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பேசியதாவது: தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களில் தமிழக மாணவர்கள் மட்டுமே சேர வேண் டும் என்பதில் அதிமுக அரசு உறுதி யாக உள்ளது. தமிழக அரசு ஒதுக் கீட்டுக்கான 3,968 எம்பிபிஎஸ் இடங்களுக்கு 39,013 விண்ணப் பங்கள் வந்தன. தகுதியானவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க வேண்டும் என்பதால் விண்ணப்பங் களையும், மாணவர்களின் பிறப்பு, இருப்பிடச் சான்றிதழ், மாணவர்கள், பெற்றோரின் ஜாதிச் சான்றிதழ், அவர்கள் தமிழகத்தில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை ஆகிய ஆவணங் களை மருத்துவக் கல்வி இயக்குநர கமும் தேர்வுக் குழுவும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி 3,611 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களிடம், “நான் தவறான சான்றிதழ்கள் அளித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தது கண்டறியப்பட்டால் எனது எம்பிபிஎஸ் சேர்க்கையை ரத்து செய்யலாம். காவல் துறை நடவடிக்கையும் எடுக்கலாம்” என சுய சான்றிதழும் பெறப்படுகிறது. இரண்டு இடங்களில் இருப் பிடச் சான்றிதழ் இருந்தால் அவர் கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடி யாது. எனவே, வேறு மாநிலங் களைச் சேர்ந்த யாரும் தமிழக ஒதுக்கீட்டில் சேர முடியாது. இவ்வாறு அமைச்சர் கூறினார். 

No comments:

Post a Comment