உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, July 10, 2019

அரசு கேபிள் டிவியில் 2 புதிய சேனல் தொகுப்புகள் அறிமுகம் சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு

அரசு கேபிள் டிவியில் 2 புதிய தொகுப்புகள் அறிமுகம் செய்யப் படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் நிறைவாக அமைச்சர் மணி கண்டன் நேற்று பதிலுரை அளித்து பேசினார்.

பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு:

தகவல் தொழில்நுட்பவியல் வளர்ச்சிக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் ரூ.1 கோடியை ரூ.5 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. பேரிடர் கால தரவு மீட்பு வசதிக்காக இக்கட்டமைப்பினை விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இத்திட்டம் ரூ.10 கோடி செலவில் நடைமுறைப் படுத்தப்படும்.

பொதுமக்கள் ஒரே இணைய முகவரியை நினைவில் கொண்டு அனைத்து சேவைகளையும் பெறும் வசதி ஏற்படுத்தப்படும். அரசின் சேவைகள் பொதுமக்களை சென்றடைய ஒற்றை செல்போன் செயலி உருவாக்கப்படவுள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழகத் தில் கணினித் தமிழுக்கு என தனிப்பிரிவு உருவாக்கப் படும். எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த காணொலிகளை ஆங்கில மொழியில் கற்பிக்க இப்பிரிவு உருவாக்கப்படுகிறது. அந்த காணொலிகளுக்குத் தமிழ்க் குரல் வழங்கி தமிழக மாணவர் கள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக 1000 காணொலி கள் எடுத்துக் கொள்ளப்பட்டு தமிழாக்கம் செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம், பொது மக்கள் அதிகம் விரும்பும் சேனல் களை கருத்தில் கொண்டு கட்டண சேனல்கள் அடங்கிய மூன்று கட்டணத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. தொகுப்பு 1-ல் 142 கட்டணமில்லா சேனல்கள், தொகுப்பு 2-ல் குடும்பத் தொகுப்பு (142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 37 கட்டண சேனல்கள்= 179 சேனல்கள்), தொகுப்பு 3 -ல் தமிழ் தொகுப்பு (142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 49 கட்டண சேனல்கள்=191 சேனல்கள்) வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிராமப்புற மக்கள் விரும்பும் வகையில் குறைந்த கட்டணத்தில் புதியதாக இரண்டு சேனல் தொகுப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் படி, தொகுப்பு 4-ல் கிராமப்புற தொகுப்பு (142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 12 கட்டண சேனல்கள்=154 சேனல்கள்) மொத்தக் கட்டணம் ரூ.170 மற்றும் வரி கட்டணம்.

தொகுப்பு 5-ல் தமிழ் தொகுப்பு 180 (142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 28 கட்டணசேனல்கள் =170 சேனல்கள்) மொத்தக் கட்ட ணம் ரூ.180 + வரி கட்டணம் வசூலிக்கப்படும். அறிமுகப் படுத்தப்பட உள்ள சேனல் தொகுப்பு 4 , தொகுப்பு 5 மூலம் பொதுமக்கள் டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை குறைந்த கட்டணத் தில் கண்டுகளிக்கலாம். இவ்வாறு மொத்தம் 16 அறி விப்புகள் வெளியிடப் பட்டன.

No comments:

Post a Comment