உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, July 9, 2019

ரூ.2,000 தயாரிப்பு செலவு ரூ.3.53

2000 ரூபாய் நோட்டுக்கான தயாரிப்பு செலவு 65 பைசா குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்த தைவிட 2018-19 நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுக்கான தயா ரிப்பு செலவு 65 பைசா குறைந் துள்ளது. 2016-ம் ஆண்டு நவம் பர் மாதம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறி முகப்படுத்தப்பட்டது. 2017-18 ம் ஆண்டுகளில் ரூ.4.18 ஆக இருந்த அதன் தயாரிப்பு செலவு 2018-19 -ம் ஆண்டுகளில் ரூ.3.53 ஆக குறைந் துள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்பிஎம்சிஐஎல் ஆகிய இரு நிறு வனங்கள் ரூபாய் காகிதங்களை அச்சிட்டு வருகின்றன. இதில் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மட்டுமே அச்சிடப்படுகின்றன. மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அளித்த தகவலின்படி, ரிசர்வ் வங்கியின் 500 ரூபாய் நோட்டுக்கான தயாரிப்பு செலவு 2017-18 ஆண்டுகளில் ரூ.2.39 ஆக இருந்தது. 2018-19-ல் அது ரூ.2.13 ஆக குறைந்துள்ளது. அதேபோல், 200 ரூபாய் நோட்டுக் கான தயாரிப்பு செலவு 2017-18 ல் ரூ.2.24 ஆக இருந்தது 2018-19 ல் ரூ.2.15 ஆக குறைந்துள்ளது. எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனம் அச்சிடும் 500 ரூபாய் நோட்டுக்கான தயாரிப்பு செலவு 2018-19 மற்றும் 2017-18 ஆண்டுகளில் ரூ.3.37 ஆக உள்ளது. 200 ரூபாய் நோட்டின் தயாரிப்பு செலவிலும் எந்த மாற்றமும் இல்லை. 2018-19 மற்றும் 2017-18 இரு நிதியாண்டு களிலும் அதன் தயாரிப்பு செலவு ரூ.3.12 ஆகவே உள்ளது.

No comments:

Post a Comment