உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, July 9, 2019

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய குரூப்-1 முதல்நிலைத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த எழுத்துத் தேர்வு முடிந்த பின்னர், டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மாதிரி விடைத்தாள் வெளியிட்டது. அதில், 18 விடைகள் தவறானவை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 18 தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும், அதன்பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்றும் விக்னேஷ் உள்பட பலர் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தை அணுகினர். ஆனால், இவர்களது கோரிக்கைகளை நிராகரித்த டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம், தேர்வு முடிவை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விக்னேஷ் வழக்கு தொடர்ந்தார். அதில், குரூப்-1 முதல்நிலைத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘குரூப்-1 தேர்வில் மாதிரி விடைத்தாளில் 24 கேள்விகளுக்கான பதில்கள் தவறாக உள்ளன. இந்த கேள்விகளை எழுதிய தேர்வர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது. அவ்வாறு கூடுதல் மதிப்பெண் வழங்கியும், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மனுதாரர் குரூப்-1 முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment