உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

மருத்துவ படிப்புக்கு 1,461 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்

2019-20-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 31 ஆயிரத்து 353 பேர் தகுதியானவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதில் அரசு பள்ளியில் படிக்கும் 515 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 946 பேரும் என மொத்தம் 1,461 பேர் தகுதியுள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர். ஆனால் இவர்களில் எத்தனை பேருக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தகுதியான 31 ஆயிரத்து 353 பேரில் இந்த ஆண்டு படிப்பை முடித்து நீட் தேர்வு எழுதி விண்ணப்பித்தவர்கள் 16 ஆயிரத்து 132 பேர், கடந்த ஆண்டு படிப்பை முடித்து நீட் தேர்வு எழுதி விண்ணப்பித்து இருந்தவர்கள் 12 ஆயிரத்து 136 பேர், மற்றவை 3 ஆயிரத்து 85 பேரும் ஆவர். இவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் கலந்தாய்வில் பங்கு பெற இருக்கின்றனர்.

No comments:

Post a Comment