உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, July 9, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது  முதல் 10 இடங்களில் இருந்த மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு சென் னையில் நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்த மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந் தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர் களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க 48 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. சிறப்பு பிரிவில் மீதமுள்ள இடங் கள், பொதுப்பிரிவுக்கு மாற்றப் பட்டன. பொதுப்பிரிவினருக்கான கலந் தாய்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்குமாறு 103 மாணவ, மாணவிகளுக்கு (நீட் மதிப்பெண் 685 முதல் 610 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்ற தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்த மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர். அவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான அனு மதி கடிதத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங் கினார். அப்போது சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் எட் வின் ஜோ, மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்து வமனை இயக்குநர் ஆர்.விமலா ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் சி.விஜய பாஸ்கர், “தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 350 எம்பிபிஎஸ் இடங் கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசு இடங்களின் எண்ணிக்கை 3,968 ஆக உயர்ந் துள்ளது. எம்பிபிஎஸ் படிப்பை எப்படியாவது படிக்க வேண்டும் என்பதற்காக ஒருவரே இரண்டு மாநிலத்தில் விண்ணப்பிப்பது மற்றும் இருப்பிடச் சான்று இல் லாமல் விண்ணப்பிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவர் 2 மாநிலத்தில் விண்ணப்பித்தால், அவர் தகுதி நீக்கம் செய் யப்படுவார். இதனை, நீட் தேர்வு எழுதிய வரிசை எண்ணை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அரசு இடங்களுக்கு இருப்பிடச் சான்று இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்” என்றார். இந்த கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெறவுள்ள இரண்டாம் நாள் கலந்தாய்வில் பங்கேற்குமாறு 406 பேருக்கு (நீட் மதிப்பெண் 609 முதல் 561 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மருத்துவ செலவை தமிழிசை ஏற்கவில்லை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர்செல்வத்தின் மகள் ஜீவிதா, அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்தார். இதுதொடர்பான செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது. இதை கேள்விப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தையல் தொழிலாளியின் வீட்டுக்கு சென்று மாணவியை பாராட்டி ரூ.50 ஆயிரம் வழங்கினார். அவரின் படிப்புச் செலவை ஏற்பதாக பெற்றோரிடம் உறுதி அளித்துவிட்டுச் சென்றார். இதுதொடர்பான செய்தி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானது. மேலும், தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, அப்பகுதி போலீஸ் இஸ்பெக்டர்கள் என பலரும் மாணவி ஜீவிதாவுக்கு பண உதவி செய்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி ஜீவிதாவுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. கல்லூரியில் சேர்வதற்கான அனுமதிக் கடிதத்தை பெற்றுக் கொண்டு வந்த ஜீவிதாவிடம் பேசிய போது, “எங்கள் வீட்டுக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், நான் மருத்துவம் படிப்பதற்கான முழு செலவையும் தானே ஏற்பதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், அதன்பின் அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு நிறைய பேர் பண உதவி செய்தனர். அந்த பணத்தை வைத்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத்தை நான் கட்டிவிட்டேன்” என்றார்.

No comments:

Post a Comment