ஓமனில் மேற்பார்வையாளர் பணி: விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி

ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் மேற் பார்வையாளர்கள் பணிக்கு விண் ணப்பிக்க ஜூலை 10-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன் னணி நிறுவனத்தில் கேஸ்டிங் பிஷிங் (casting fishing) மற்றும் மேற்பார் வையாளர்கள் பிரிவில் காலிப் பணி யிடங்கள் உள்ளன. இதில் பணிபுரிய மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று மெஷின் ஆபரேட் டர் மற்றும்பவுன்ட்ரி பிரிவில் 2வருட பணி அனுபவம் உள்ள 30 வயதுக்குள் பட்டோர் விண்ணப்பிக்கலாம். தேர்ந் தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனு பவத்துக்கேற்ற ஊதியத்துடன் விசா, உணவு, இருப்பிடம்,விமானடிக்கெட் மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திட் டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போர் மூலம் வழங்கப்படும். இதற்கு தகுதி யுள்ளவர்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பத்தை omceq80@gmail.com என்னும் மின்னஞ்சல் முக வரிக்கு ஜூலை 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங் களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தொலைபேசி எண்கள் (044 2250 2267, 95662 39685) மற்றும் www.omcmanpower.com என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment