உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

நாடு முழுவதும் இன்று (07.07.2019) மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காக மாநில அரசின் சார்பில் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், கேந்திரிய வித்யாலயா, நவோதயா உட்பட மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சிடெட் 2 தாள்களை கொண்டது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாளும், பட்டதாரி ஆசிரியருக்கு 2-ம் தாளும் எழுத வேண்டும். இரு தேர்வுகளும் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் பெற்றாக வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான சிடெட் தேர்வு நாடு முழுவதும் 97 மையங்களில் இன்று (ஜூலை 8) நடைபெறவுள்ளன. இந்த தேர்வில் 20 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளும் கடந்த வாரமே வெளியிடப்பட்டது. தேர்வர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மையத்துக்குள் செல்ல வேண்டும் என்பன உட்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment