உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Saturday, June 8, 2019

ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு கடினம் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது

ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1,081 மையங்களில் 2-ம் தாள் தேர்வை இன்று 4.20 லட்சம் பேர் எழுதுகின்றனர். இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதியுடையவர்கள். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து டெட் முதல் தாள் தேர்வு மாநிலம் முழுவதும் 470 மையங்களில் நேற்று நடைபெற்றது. விண்ணப் பித்தவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 330 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு குறித்து டெட் தேர்வர் கள் சிலர் கூறும்போது, ‘‘முதல் தாள் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்ப்பகுதி மட்டுமே எளிதாக இருந்தது. நேரடி வினாக் கள் அதிகம் இடம்பெற்றன. ஆனால், கணிதம், சமூக அறிவி யல், உளவியல், அறிவியல் போன்ற இதர பிரிவுகள் கடினமாக இருந்தன. கணிதத்தில் பெரு வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதால் பலருக் கும் நேரம் போதுமானதாக அமைய வில்லை. இதேபோல், உளவியல் பிரிவில் பல வினாக்கள் மறைமுக மாகவே கேட்கப்பட்டிருந்தன. நன் றாக படித்தவர்களுக்கும் வினாத் தாள் கடினமாகவே இருந்தது’’ என்றனர். பறக்கும் படைகள் தொடர்ந்து 2-ம் தாள் தேர்வு இன்று (ஜூன் 9) நடைபெறுகிறது. மொத்தம் 4 லட்சத்து 20 ஆயி ரத்து 815 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர். இதற்காக சென் னையில் 60 உட்பட மாநிலம் முழுவதும் 1,081 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment