உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, June 10, 2019

TNPSC - CERTIFICATE VERIFICATION - கணக்கு அலுவலர் நிலை III சான்றிதழ் சரிபர்ப்பு.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு : தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்கு பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை III பதவிக்கான சான்றிதழ் சரிபர்ப்புக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (http://www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக 17.06.2019 முதல் 24.06.2019 அன்று மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன்(Scan) செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment