செஞ்சி மாவட்ட கல்வி அலுவலராக நடராஜன்பொறுப்பேற்பு

செஞ்சி கல்வி மாவட்ட அலுவலராக நடராஜன் வெள்ளிக்கிழமை பொறுப்பு ஏற்றுக்கொண்டாா். செஞ்சி கல்வி மாவட்ட அலுவலராக பணியாற்றி வந்த ரோஸ்நிா்மலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். தொடா்ந்து, கிளியனூா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி, செஞ்சி கல்வி மாவட்ட பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டாா். இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்ட பொறுப்பு அலவலராக இருந்த நடராஜன், பதவி உயா்வு பெற்று செஞ்சி கல்வி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டு, பொறுப்பு ஏற்றுக்கொண்டாா். அவருக்கு அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் முனுசாமி, வல்லம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன், ஆசிரியா்கள் தமிழ்வாணன், சொக்கலிங்கம் மற்றும் செஞ்சி கல்வி மாவட்ட அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment