நாடு முழுவதும் 14 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய  நீட் தேர்வு முடிவுகள் நாளை (05.06.2019) வெளியீடு

நாடுமுழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - ‘நீட்’) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நாடுமுழுவதும் கடுமை யான சோதனைகள் மற்றும் கட்டுப் பாடுகளுடன் கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 20-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்கள் உட் பட நாடுமுழுவதும் 154 நகரங் களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங் களில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் தேர்வு நடைபெற் றது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் (93 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. நீட் தேர்வு முடிவுகள் வரும் 5-ம் தேதி (நாளை) www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளன. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் 15 நாட்கள் தாமதமாக நீட் தேர்வு நடைபெற்றது. இதனால், தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்தபடி வரும் 5-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமா அல்லது காலதாமதம் ஏற்படுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் உட்பட நாடுமுழுவதும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

No comments:

Post a Comment