உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அடிப்படையில் தான் வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் 98 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மின்சார வாரியத்தில் 235 உதவி பொறியாளர் பணியிடங்களில் 38 வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் எங்கு வேண்டும் என்றாலும் தேர்வு எழுதலாம் என்ற அடிப்படையில் தான் அந்த பணி நியமனம் நடந்தாக கூறினார். மேலும் வெளிமாநிலத்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment