உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, June 16, 2019

வாட்ஸ்அப் செயலி எச்சரிக்கை செய்தி...

வாட்ஸ்அப் செயலி மூலம் அதிகப்படியான தகவல்களை (Bulk Messages) அனுப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில், தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ்-அப் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 25கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், இச்செயலியின் மூலம் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களும் காட்டுத்தீ போல் வேகமாக பரப்பப்படுகிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்தான், வாட்ஸ்-அப் மூலம் ஒரு முறை 5 நபர்களுக்கு அல்லது 5 குழுக்களுக்கு மேல் ஒரு தகவலை பரிமாற்றம் செய்ய முடியாதபடி, கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இந்த கட்டுப்பாட்டையும் மீறி, வாட்ஸ் -அப் வசதியை பயன்படுத்தி, அதிகப்படியான நபர்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வோரின் வாட்ஸ் -அப் கணக்கை முடக்கியோ, நீக்கியோ அந்நிறுவனம் தற்போது நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நிலையில், வாட்ஸ்-அப்பின் தானியங்கி தொழில்நுட்ப வசதி மற்றும் பிற வழிகளில் அளவுக்கு அதிகமான தகவல்களை (Bulk messages) பரிமாற்றம் செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், அதற்கு உதவியாக இருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 7 -ஆம் தேதி முதல் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment