‘சர்வர்’ கோளாறால் நீட் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் மாணவர்கள் திணறல்

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேசிய தேர்வு முகமை இணையதளமான www.nta.ac.in, www.nta-n-eet.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று பிற்பகல் 1.45 மணி அளவில் தேர்வு முடிவு வெளியானது. தேர்வு முடிவு வெளியானதும், மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை இணையதளத்துக்கு சென்று ஆர்வமாக பார்த்தனர். தேர்வு முடிவு வெளியான சில நிமிடங்கள் வரை மட்டுமே மாணவர்களால் மதிப்பெண்களை பார்க்க முடிந்தது. அதன்பின்னர், தேசிய தேர்வு முகமையின் சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் நீட் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் மாணவ-மாணவிகள் திணறினார்கள். நேற்று இரவு வரை தேசிய தேர்வு முகமையின் இணையதளம் முடங்கியே இருந்த

No comments:

Post a Comment