பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களை உடனே விடுவிக்க உத்தரவு

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 34 ஆயிரத்துக்கும் அதிகமான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. அதில் 30-க்கும் குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட ஈராசிரியர்களே இருப்பார்கள். இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வில் வேறு இடங்களுக்கு மாறுதல் பெற்றாலும் அந்த இடத்துக்கு வேறு ஆசிரியர்கள் வந்த பின்பே விடுவிக்கப்படுவர். அதேபோல், கடந்த கல்வி ஆண்டில் ஜூலை மாதம் நடைபெற்ற இடமாறுதல் கலந்தாய்வில் வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றும் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை உடனே விடுவிக்க வேண்டும். அவர்கள் ஜூன் 6-ம் தேதிக்குள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சேர வேண்டும். அவ்வாறு பணி மாறுதலில் செல்லும் ஆசிரியர் விவரம், புதிதாக சேரும் பள்ளியின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்) பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலியிடங்களை பணிநிரவல் அல்லது பணி மாறுதல் மூலம் நிரப்ப முடிவாகியுள்ளது.

No comments:

Post a Comment