பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் பயன்படுத்த அனுமதி அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உத்தரவு 

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ்களைப் பயன்படுத்தலாம். மாணவர்களிடம் நடத்துநர்கள் பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு போக்குவரத் துக் கழகங்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர் களுக்கு கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டு பணிகளை நிறைவேற்றி வருகிறது. பள்ளி மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவை பள்ளிகளி டம் பெறப்பட்டு வருகின்றன. இருப் பினும் புதிய பஸ் பாஸ் வழங்கு வதற்கு, பள்ளிகள் திறந்து சுமார் ஒரு மாதம் வரையில் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ்கள் வழங்கும் வரையில், பழைய பஸ் பாஸ்களைப் பயன்படுத்த அவர்களை அனுமதிக்கலாம் என போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஆண்டுதோறும் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பஸ் பாஸ் விரைவில் அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பள்ளிக் கல்வித் துறை அதிகாரி களிடமிருந்து மாணவர்களின் முழு விபரங்கள் வந்தவுடன் உடனுக்கு டன் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிச் சீருடையுடனும், அடையாள அட்டையுடனும் வரும் மாணவ, மாணவியரிடம் பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. பழைய பஸ் பாஸ்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். பள்ளி மாண வர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடத்துநர்கள் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ் களை வழங்க ரூ.1.90 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) 3,60,000 பஸ் பாஸ்களும், விழுப்புரம் - 4,70,435, சேலம் - 2,94,800, கோவை - 3,40,000, கும்பகோணம் - 3,76,558, மதுரை - 3,30,000, திருநெல்வேலி - 2,49,555 என மொத்தமாக 24,21,348 இலவச பஸ் பாஸ்கள் இந்த ஆண்டு வழங்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment