பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய-மாநில அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

மத்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), நடத்தும் தேர்வை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குருப் 4 தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் இலவச கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதில் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு துறை சார்ந்த வல்லுனர்கள், அரசுப் பணியில் உள்ள உயர் அதிகாரிகள், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பதிலளிக்க உள்ளனர். மேற்கண்ட தகவல் பெரியார் ஐ.ஏ.எஸ்.அகாடமி இயக்குனர் கா.அமுதரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment