புதிய பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2019-2020-ம் கல்வியாண்டிற்கு ரூ.195.25 கோடி செலவில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங்கினார். புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டுதான் 3-ந் தேதியன்றே (நேற்று) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், முழுமையாக பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் இன்று(அதாவது நேற்று) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment